கைதிக்கு தொலைபேசி வழங்கியதால் மாட்டிக்கொண்ட பொலிஸ் உத்தியோகத்ததர்!
Saturday, July 15th, 2017யாழ்.சிறைச்சாலையில் கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த உத்தியோகத்தருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கடமையாற்றும் சகோதர இனத்தைச் சேர்ந்த உத்தியோகத்தரே இவ்வாறு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது -யாழ்ப்பாணம் சிறையிலுள்ள கைதி ஒருவருக்கு களவாக தொலைபேசி வழங்கப்பட்டு வந்துள்ளது. அந்த தொலைபேசி எந்த உத்தியோகத்தரின் உதவியுடன் செல்கின்றதென்பதனை கண்டறிவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குறித்த கைதிக்கு நேற்றுமுன்தினம்; தொலைபேசி கொண்டு சென்ற போது, கொண்டு சென்றவர் சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.
ஆந்த வேளையில், குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் பருத்தித்துறை நீதிமன்றில் கடமையில் நின்ற போது, குறித்த தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்திய போது, யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் கதைத்தவற்றினை கேட்டுள்ளார். அதன்போது 5 ஆயிரம் ரூபா காசு ஈஸி காஸ் மணி மாற்றத்தின் மூலம் பணத்தினைப்பெற்றுக்கொண்டுள்ளார்.
நடந்த சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளருக்கு அறிவித்ததன் பின்னர் குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
Related posts:
|
|