கைதிகள் படுத்துறங்க மெத்தைகள்!

இதுவரை காலமும் சிறைக் கைதிகள் படுத்துறங்க வழங்கப்பட்ட பாய்களுக்கு பதிலாக மெத்தைகள் வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலகுவாக உபயோகப்படுத்தும் வகையில் இந்த மெத்தைகள் கைதிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் குறித்த மெத்தைகளை சிறைச்சாலைகள் திணைக்களமே தயாரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
இதன் முதற் கட்டமாக கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதனை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த மெத்தைகள் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
நீர் மற்றும் மின்சார பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு உடனடி தீர்வு பொது பயன்பாட்டு ஆணை...
இலங்கை கடற்படையினர் அதிரடி நடவடிக்கை – சட்டவிரோத இந்திய மீன்பிடியாளர்கள் 23 பேர் கைது!
தனித்தனியே நின்று கட்சி அரசியல் செய்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது – ஜனாதிபதியின் கரங்களை...
|
|