கைதடிப் பகுதியில் கொள்ளையர்கள் கைவரிசை!

Friday, February 3rd, 2017

கைதடிப் பகுதியில் ஆயதங்களுடன் வந்த 6பேருக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் 4 வீடுகளில் கொள்ளையிட்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

2பவுண் கொண்ட 2 சங்கிலிகள், கைச்செயின், லுமாலா துவிச்சக்கரவண்டி, 21ஆயிரம் ரூபா பணம் என்பன இந்த 4 வீடுகளிலும் கொள்ளையிடப்பட்டன. ஒரு வீட்டில்  நீர் இறைக்கும் இயந்நிரத்தைக் கழற்ற முடியாத நிலையில் திருடர்கள் பாதியில் விட்டுச் சென்றனர். இறுதியாகக் கொள்ளையிட்ட வீட்டில் கத்தி, பொல்லுகள் என்பற்றை விட்டுச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் வந்ததைக் கண்டுகொண்ட இந்த வீட்டுக்காரர் பயத்தின் மத்தியில் சத்தம் போடாமல் இருந்ததாக தெரிவிக்கப்ப்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் 4 வீட்டுக்காரர்களும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

news_23-06-2014_98THEFTPETROL

Related posts: