கேப்பாபுலவு மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்!

Thursday, February 9th, 2017

கேப்பாபுலவில் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கவனயீர்ப்பு நிகழ்வொன்று எதிர்வரும் வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக நடைபெறவுள்ளதாக சமூக வலைத்தள இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்
கறித்த நிகழ்வு காலை ஒன்பது மணி முதல் பதினோரு மணி வரை அமைதி வழியில் நிகழ்த்துவதற்கானதும் அதனைத் தொடர்ந்து கேப்பாபுலவிற்கு செல்வதற்கானதுமான நிகழ்விற்கு கேப்பாபுலவு மக்களிற்காக ஒன்றிணையும் சமூக வலைத்தள இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
விரும்பியவர்கள் ஒன்றுகூடல் முடிந்த பின் கேப்பாபுலவிற்கு செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளனர். 11 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கேப்பாபுலவுக்கு சென்று, மாலையில் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

69745ffe

Related posts: