கூட்டு எதிர்க்கட்சி தொடர்ந்து பங்குகொள்ளும் –  தினேஷ் குணவர்த்தன!

Friday, March 24th, 2017

புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் குழுவின் கூட்டம் தொடர்பில் ஆங்கில பத்திரிகையொன்றில் வெளியான செய்திகளுக்கு கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த குழுவின் கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சி பங்கேற்க மாட்டாதென செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தி தவறானதென கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நேற்ற சபையில் தெரிவித்துள்ளார்.

குழுவின் கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

தவறான தகவல்களை வழங்குவோர் குறித்து விசாரிக்க வேண்டும். குழுவில் பங்கேற்கும் சகலரது பெயர் விபரங்கள் பற்றி பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டுமென திரு.குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றுகையில்: புதிய அரசியல் யாப்பை அமைக்கும் குழுவின் கூட்டங்களில் கூட்டு எதிர்க்கட்சி பங்கேற்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

Related posts: