கூட்டுறவு பணியாளர் உயர்தர கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்!

யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு பயிற்சிக் கல்லூரியால் நடத்தப்படும் கூட்டுறவு பணியாளர் தராதர உயர்தர பயிற்சிக் கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த உயர்தர கூட்டுறவுப் பணியாளர் தரப் பயிற்சியைப் பெற வெளிவாரி விண்ணப்பதாரிகளாயின் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒரே தடைவ 3 பாடங்களில் சித்தியடைந்தவர்களாகவும் கூட்டுறவுப் பணியாளர்களாயின் கூட்டுறவு பணியாளர் தரப் பயிற்சி பெற்றவர்களாகவும், 2 வருட கூட்டுறவுத்துறை அனுபவம் உடையவர்களாகவும் அல்லது க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களிலும் ஒரே தடைவயில் சித்தியடைந்த கூட்டுறவு பணியாளர்களும் விண்ணப்பிக்க முடியும்.
இப் பயிற்சிக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன் யாழ்ப்பாணம் இல.12, கே.கேஎஸ் வீதியில் உள்ள யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவுச் சபையில் பெற்று பூரணப்படுத்தி சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|