கூட்டுறவாளர் தினம் அடுத்த மாதம்!

Tuesday, August 28th, 2018

 

யாழ். மாவட்ட கூட்டுறவு சபையினரால் 96 ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினம் எதிர்வரும் செப்ரெம்பர் 4 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சபையின் தலைவர்  தலைமையில் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும்.

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ.வாகீசன் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொள்வார். சர்வதேச கூட்டுறவாளர் தினத்தை முன்னிட்டு சபையினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசில்கள், கேடயங்கள் என்பன வழங்கப்படும்.

அதனை விட சிறந்த கூட்டுறவாளர்கள், சிறந்த சங்கங்கள் போன்றவையும் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளன.