குழு மோதல் பற்றி அறிந்த ஓட்டம் பிடித்த பொலிஸார் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

Tuesday, June 19th, 2018

யாழ் நகரில் இடம்பெற்ற குழு மோதலை கண்ட போக்குவரத்துப் பொலிஸார் அவ்விடத்தை விட்டு வேகமாக சென்ற சம்பவம் ஒன்று நேற்று யாழ் நகரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்:

யாழ் நகரை அண்டிய பிறவுண் வீதி பகுதியில் மாணவக் குழுக்களிடையே கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் குறித்த மோதல் தொடர்ந்ததால் அப்பகுதி வீதியில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு சற்றுத் தொலைவில் போக்குவரத்துப் பொலிஸார் வருவதைக் கண்ட நபர் ஒருவர் குறித்த மோதல் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குத் தெரிவித்ததுடன் உடனே சென்று மோதலை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்தார்.

எந்த பக்கம் மோதல் இடம்பெறுகின்றது என அந்த நபரிடம் பொலிஸார் கேட்டுள்ளனர். அவர் மோதல் இடம்பெறும் திசையை காட்டியுள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் நின்ற பொலிஸார் மோதல் இடம்பெறும் திசை நோக்கி மெதுவாகச் சென்றுள்ளனர். பின்னர் திடீரென மோட்டார் சைக்கிளைத் திருப்பி குறித்த திசைக்கு எதிர்த் திசையாக அதிவேகமாக அப்பகுதியை விட்டு சென்றுள்ளனர். பொலிஸாரிடம் முறையிட்ட குறித்த நபர் ஆச்சரியத்துடன் செய்வதறியாது அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளார்.

Related posts: