குழந்தையை பிரசவித்த தாய் 7ஆவது நாள் உயிரிழப்பு!

குழந்தை பிரசவித்த தாய் ஒருவர் 7ஆவது நாள் உயிரிழந்தார். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஈரலற்சி என்ற நோய்க்காரணமாக அவர் உயிரிழந்ததாக உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 16ஆம் திகதி குறித்த தாய் சேர்க்கப்பட்டார். மறுநாள் சத்திரசிகிச்சை மூலமாகக் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது, அவரது 1ஆவது குழந்தை அது. 2நாட்கள் கதைத்துக்கொண்டிருந்தவர் 3ஆவது நாளில் கோமாவுக்கு சென்றார். என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. முதல் பிரசவத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், சுழிபுரம் – பாண்டைவெட்டையைச் சேர்ந்த பிரசாந்த் இரசித்தா (வயது – 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். திடீர் இறப்பு விசாரணையை பொலிஸார் மேற்கொண்டனர். கர்ப்ப கால அழற்சி காரணத்தால் ஏற்படும் ஈரலற்சி நோயால் அவர் பாதிக்கப்பட்டிருதமை தெரியவந்தது. அதனாலேயே உயிரிழந்தார் என் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை தெரிவிக்கப்பட்டது
Related posts:
|
|