குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

Saturday, February 2nd, 2019

இறப்பை ஏற்படுத்திய குற்றவாளிகள் இருவருக்கு யாழ் மேல்நீதிமன்று வழங்கிய 15 வருட கடூழிய சிறைத் தண்டனைக் காலத்தை மேன்முறையீட்டு நீதிமன்று 10 வருடங்களாகக் குறைத்து தீர்ப்பளித்துள்ளது.

2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி கல்வியங்காட்டுப் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு இறப்பை ஏற்படுத்திய குற்றவாளிகளான இரண்டு பேருக்கு 2016 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி அப்போதைய மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்திருந்தார். அவர்கள் இருவரும் மேற்குறித்த தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்தனர். கடந்த ஜீலை 11 ஆம் திகதி நீதியரசர் விஜயசுந்தர அதைப்பற்றி பரிசீலித்து சிறைத்தண்டனைக் காலத்தை 10 வருடங்களாக குறைத்து உறுதிப்படுத்தியிருந்தார். குறித்த தீர்ப்பு 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதியிலிருந்தே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பை உறுதிப்படுத்தி யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் குற்றவாளிகள் முன்பாக நேற்று முன்தினம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. இதற்கென்று யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி அ.பிரேமசங்கர் முன்னிலையில் யாழ்ப்பாண மேல்நீதிமன்று கூடியிருந்தது. அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையாகியிருந்தார்.

Related posts: