குற்றச் செயல்களை தடுக்க பொலிஸாருக்கு உலங்கு வானூர்தி!

Thursday, January 19th, 2017

குற்றச் செயல்களை தடுக்க பொலிஸாருக்கு உலங்கு வானூர்தி வழங்கப்படவுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த உலங்கு வானூர்தி யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை .

உலங்கு வானூர்தி ஒன்றை பயன்படுத்தினால் இலகுவில் கொள்ளையர்களை பொலிஸாரினால் கைது செய்ய முடியும் என பொலிஸ் அதிகாரிகள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர். வாகன நெரிசல்களை கண்காணிப்பதற்கும் உலங்கு வானூர்தி உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய பொலிஸாரின் பயன்பாட்டுக்காக அரசாங்கம் உலங்கு வானூர்தி ஒன்றை வழங்கவுள்ளது.

 625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: