குற்றங்களைக் கட்டுப்படுத்த தனி பொலிஸ் பிரிவு!

இலங்கையில் குழுக்களாக இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைத் தடுக்க விஷேட பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் எந்தவொரு இடத்தில் இடம்பெறும் திட்டமிட்ட குற்றம் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தின் கீழ் இந்த புதிய பொலிஸ் பிரிவானது பொலிஸ் கட்டளைச் சட்டதின் கீழ் உருவாக்கப்ப்ட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய, அவரது நேரடி கட்டுப்பாட்டில் மேல் மாகாணம், குற்ற மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முணசிங்கவின் கண்காணிப்பின் கீழ் இந்த பொலிஸ் பிரிவு இயங்கவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
Related posts:
ஐ.எஸ் சந்தேகம்: விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தப்பட்ட குடும்பம்!
நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீரவின் வாகனம் விபத்து – ஒருவர் பலி!
பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி மரியாத...
|
|