குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்சாரம்!

குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் 19 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
குருநாகல் நாரம்மலைஇ குளியாபிட்டிஇ வாரியபொல ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்கள் இதன் மூலம் நன்மை அடைந்துள்ளனர்.
562 குடும்பங்களுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 23 ஆயிரத்து 400 பேர் மின்சாரம் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தனர். இதில் மூவாயிரத்து 800 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
Related posts:
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட ஏற்பாடு!
கனடாவில் யாழ்ப்பாண இளைஞன் மரணம்!
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை எட்டுவதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமை...
|
|