குப்பிளானில் இரு வீதிகள் புனரமைப்பு !

வலி.தெற்குப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட குப்பிளான் விவசாய வீதியின் புனரமைப்பு வேலைகள் மிகவும் துரித கதியில் இடம்பெற்று வருகிறது.
1.7 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதி கடந்த பல வருடங்களாகத் திருத்தப்படாத காரணத்தால் போக்குவரத்துச் செய்வதில் பல்வேறு தரப்பினரும் பெரும் இடர்பாடுகளை எதிர்கொண்டு வந்தனர்.
பிரதேச சபையின் 4.8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஜனவரி மாதம் வீதிப் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் மார்ச் மாதம்- 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவிருந்த வீதியின் புனரமைப்பு வேலைகள் கிரவல் மண்ணுக்கு நிலவிய தட்டுப்பாடு காரணமாக மேலும் ஒரு மாத காலம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வலி.தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் தி. சுதர்சன் தெரிவித்தார்.
இதேவேளை , 900 மீற்றர் நீளமான குப்பிளான் சமாதி கோவிலடி வீதியின் சுமார் 600 மீற்றர் தூரம் கடந்த வருடம் நெல்சிப் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பகுதியின் புனரமைப்பு வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சபையின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|