குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Monday, July 25th, 2016

கடந்த 22ஆம் திகதி காங்கேசன்துறை வீதி, இணுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று (24) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

வீதியைச் திரையரங்கு, இணுவிலைச் சேர்ந்த இளையதம்பி செல்வராசா (வயது 60) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். இணுவில் பகுதியில் மஞ்சள் கடவையைக் கடந்து சென்ற மேற்படி முதியவரை, மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்து, முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சுமார் 13 மணித்தியாலங்களாக முதியவருக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் இருந்தமையே அவர் உயிரிழந்தமைக்குக் காரணம் என திடீர் மரண விசாரணை அதிகாரி என்.பிறேம்குமாருக்கு முதியவரின் உறவினர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: