குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் சேவை இன்று முதல் பத்தரமுல்லையில் ஆரம்பம்!

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சேவை பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டமையால் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
பத்தமுல்லை இசுருபாயவிலுள்ள புதிய கட்டடத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளவுள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லக்ஷான் டி சொய்சா தெரிவித்தார்.எவ்வாறாயினும், கடவுச் சீட்டு பெற்றுக் கொள்ளும் ஒருநாள் சேவை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கண்டி மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள பிராந்திய அலுவலகங்களின் சேவைகளும் வழமைபோன்று இடம்பெறவுள்ளன.
Related posts:
போதையில் திரிந்தால் இரவு முழுவதும் சிறைக்குள் ஓமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுக...
நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்திய பிரமாணம்!
|
|