குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை: சிறுநீரக நோய்க்குள்ளாகும் துணுக்காய், மாந்தை கிழக்கு மக்கள்!

download (4) Thursday, April 12th, 2018

துணுக்காய், மாந்தை கிழக்கு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை காரணமாக அதிகளவானோர் சிறுநீரக நோய்க்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, துணுக்காய் பகுதிகளிலுள்ள பெருமளவான குடிநீர் கிணறுகளில் நீர் வற்றியுள்ளதுடன் இந்தப்பகுதியில் பெறப்படுகின்ற நீரை குடிநீராக பாவிக்கமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள இப் பகுதி மக்கள் இந்தப் பிரதேசங்களில் அதிகளவான மக்கள் சிறுநீரக நோய்க்குள்ளாகி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை இந்தப்பகுதிகளில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கிராம மட்ட அமைப்புகளுக்கோ அல்லது தனியாருக்கோ நீர்ச்சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கி அவற்றின்மூலம் சுத்திகரிக்கப்படுகின்ற நீரை மக்கள் பெறக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றனர்.