குடிதண்ணீர் சுத்திகரிப்பு தொகுதிகள் கையளிப்பு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குடிதண்ணீர் சுத்திகரிப்பு தொகுதி மாணவர் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு கல்லூரி அதிபர் சதா.நிமலன் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் 1986 ஆம் ஆண்டு க.பொ.த உ.த பிரிவினரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இரண்டு நவீன குடிதண்ணீர் சுத்திகரிப்பு தொகுதியே மாணவர்களின் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.
முன்னாள் கணித ஆசான் முத்து நடராஜாவும் அவரது பாரியாரும் நிகழ்வில் கலந்து கொண்டு தொகுதியைத் திறந்தனர். 1986 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் சார்பில் மருத்துவ கலாநிதி பூ.லக்ஷ்மன் மற்றும் மருத்துவ கலாநிதி ஸ்ரீ.கோணேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related posts:
செவ்வாயன்று புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து!
புதிய அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் - அதி விசேட வர்த்தமானியும் வெளியீடு!
ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பதற்கு முன்னர் இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அனுப்பிய பரிசு!
|
|