குடாநாட்டு விவசாயிகளுக்கு 30 வீதமானமுதலீட்டுடன் வெங்காயம், மிளகாய்விதை உற்பத்திகளுக்கு நிதி ஒதுக்கீடு!

Thursday, June 7th, 2018

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் நலன்கருதி 30 வீதமுதலீட்டுடன் சின்ன வெங்காய உற்பத்தி, மிளகாய்விதை உற்பத்தி, மிளகாய்ச்செய்கை போன்ற வற்றுக்கு அரசதலைவர் செயலகத்தால் 12.1 மில்லியன் ரூபாநிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன்விவசாய உற்பத்திகளின் பல செயற்றிட்டங்களுக்கும் நிதிகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணமாவட்டச் செயலகத்தில் மாவட்டவிவசாயக் குழுக்கூட்டத்தின் போதே குறித்தவிடயம் தெரிவிக்கப்பட்டது.  அந்தக்கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

சின்னவெங்காயவிதை உற்பத்திக்கு 0.8 மில்லியன்ரூபாவும் மிளகாய்விதை உற்பத்திக்கு 0.9 மில்லியன்ரூபாவும் மிளகாய்ச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக 6.8 மில்லியன் ரூபாவுமாக அரசதலைவர் செயலகத்தால் மொத்தமாகப் 12.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 30 வீதமானதொகைவிவசாயிகளின்முதலீடுமூலமும் 70 வீதமானதொகை அரச முதலீடாகவும்காணப்படும் என்றுதெரிவிக்கப்பட்டது.

மேலும்தேசியநல்லிணக்கஅமைச்சின்மூலம்திராட்சைச்செய்கையில்ஈடுபட்டுவருபவர்களை அவர்களின்செய்கையை  ஊக்குவிக்கும்முகமாக 7.5 மில்லியன்ரூபாஒதுக்கீட்டில்ஒருவருக்கு 1.5 இலட்சம் ரூபாபெறுமதியான வலைகள், தூண்கள்வழங்கப்படஉள்ளன. அன்னாசிச்செய்கையைசெயற்படுத்தும் வகையில்தெரிவுசெய்யப்பட்டசாவகச்சேரி, கரவெட்டி, கோப்பாய்ஆகியபிரதேசஅன்னாசிச் செய்கையாளர்களுக்கு 3.4 மில்லியன்ரூபாவழங்கப்படவுள்ளது.

கிராமசக்திவிவசாயச்செயற்றிட்டம்மூலம்தெரிவுசெய்யப்பட்டபருத்தித்துறை, மருதங்கேணி, சாவகச்சேரி, சங்கானை, கோப்பாய், கரவெட்டி, சண்டிலிப்பாய், உடுவில், தெல்லிப்பழை, காரைநகர், நெடுந்தீவுஆகிய 12 பிரதேசசெயலகங்களுக்கு அரசதலைவர் செயலகத்தினூடாக மாதிரிப்பண்ணை உருவாக்கும்செயற்றிட்டம்ஒன்றுநடைமுறைப்படுத்தபடவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துக்குட்பட்ட விவசாயிகளுக்குத் தேவையான உதவித்திட்டங்களு ம்நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்தத்தீர்மானங்கள்யாழ்ப்பாணமாவட்டச்செயலர்தலைமையிலானகுழுவால்விவசாயஅமைச்சின்பரிந்துரைக்கு அனுப்பப்படவுள்ளனஎன்றுதெரிவிக்கப்பட்டது. இந்தக்கூட்டத்தில் யாழ்ப்பாணமாவட்டச்செயலர், யாழ்ப்பாண உதவிமாவட்டச்செயலர், யாழ்ப்பாணமாவட்டவிவசாயப்பணிப்பாளர், விவசாயத்திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புக்களைச் சார்ந்தவர்கள், விவசாயிகள்எனப்பலர்கலந்துகொண்டனர்.

Related posts: