குடாநாட்டில் பால்வெண்டிச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்!

Wednesday, December 12th, 2018

யாழ்ப்பாண குடாநாட்டில் பால் வெண்டிச் செய்கையில் விவசாயிகள் மிக ஆர்வம் கொண்டுள்ளதாக யாழ் மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விவசாய திணைக்களம் குறிப்பிடுகையில் ரி.வி-8 இனத்தைச் சேர்ந்த பால் வெண்டிச் செய்கையை அதிகமான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

இவ்வாறு 39 ஹெக்டயரில் பயிரிடப்பட்டுள்ளதாகவும்  மேலும் 150 ஹெக்டர் நிலப்பரப்பில் பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆர்வம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதனைவிட பச்சை இன வெண்டி செய்கையையும் விவசாயிகள் மேற்கொண்டுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.

Related posts: