குடாநாட்டில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு!

Monday, November 28th, 2016

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணி மனைக்குட்பட்ட பிரதேசத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக தாகவும் நவம்பர் மாதத்தின் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் 25 வரையான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள நோயாளர்களில் பெரும்பாலானோர் இணுவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பருவ மழை காலம் என்பதால் இந்த மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை முன்னரை விடப் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தங்களது வீட்டுப் பாவனைப் பொருட்களான பிளாஸ்ரிக், பொலித்தீன் மற்றும் நீர் தேங்கக் கூடிய பாவனையற்ற பொருட்களைப் பொதிகளில் கட்டி வைத்துப்பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

மாறாக வீதிகளிலோ, பொதுவிடங்களிலோ வீசுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.அத்துடன், ஒருவர் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்கள் எச்சரிக்கைகளையும், அறிவுறுத்தல்களையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுள்ள உடுவில் சுகாதார வைத்திய அதிகாரிபணிமனையினர் பொது விடங்களில் குப்பைகள், கழிவுகளை வீசாதுபொறுப்புணர்வுடன் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

denku

Related posts: