குடாநாட்டில் கரையோர சூழல் பாதுகாப்பு தினம்!

யாழ் மாவட்டத்தில் கரையோரப்பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைவாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் வடமாகாணத்தின் கடலோர பகுதிகளை சுத்திகரிக்கும் பிரதான நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
கடல்சார் சூழல் பாதுகாப்பு சபை , கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் குருநகர் தொடர்மாடி குடியிருப்பை அண்மித்த கடற்கரை பகுதியில் இந்தநிகழ்வு இடம்பெற்றது.
கடலோர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ரோஹன பெரேரா மற்றும் அரச அலுவலர்கள், பாடசாலை மாணவர்கள், படையினர் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.
Related posts:
அரியாசனத்தில் அமர்ந்த அந்த நபர் யார்?
காற்றின் வேகம் அதிகரிக்கும் – வானிலை அவதான நிலையம்!
உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவின் உலகின் புகழ்பெற்ற இரத்தினக்கல் ஏலத்தில் - இராஜாங்க அமைச்சர் ...
|
|