குடாநாட்டில் கதலி வாழைப்பழத்திற்குப் பெரும் தட்டுப்பாடு!

யாழ். குடாநாட்டில் கதலி வாழைப்பழத்திற்குத் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் என்றுமில்லாதவாறு வாழைப்பழத்திற்கான கிராக்கியும் அதிகரித்துள்ளது.
கடந்த மே, யூன் மாதங்களில் பலத்த காற்று வீசிய நிலையில் யாழ். குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் பல நூற்றுக் கணக்கான ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டிருந்த வாழைமரங்கள் குலைகளுடன் முறிவடைந்து அழிவடைந்தன.
இதன் காரணமாக முன்னர் 30 ரூபா முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கதலி வாழைப்பழம் தற்போது 150 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குடாநாட்டிலுள்ள ஆலயங்களில் உற்சவங்கள் இடம்பெறுவதுடன், சைவசமய மக்களால் தோஷ நிவர்த்திக்காக அனுஷ்டிக்கப்படும் புரட்டாதிச் சனி விரதமும் இந்த மாதத்தில் கடைப்பிடிக்கப்படுவதால் கதலி வாழைப்பழம் அதிகமாக விற்பனையாகி வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
இலங்கை நிதி புலனாய்வுப் பிரிவு - உள்நாட்டு இறைவரி திணைக்களம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
யாழ்ப்பாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!
கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் - பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும...
|
|