குசல் பெரேராவிற்கு இழப்பீடு!

ஊக்கமருந்து பாவித்ததாக தவறான குற்றச்சாட்டின் பேரில் போட்டி தடை விதிக்கப்பட்ட இலங்கை அணியின் வீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு இழப்பீடு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கட் சபையின் வருடாந்த கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன குசல் ஜனித் பெரேராவிற்கு இழப்பீடு வழங்க சர்வதேச கிரிக்கட் சபையின் பிரதிநிதிகள் ஒருமனதாக அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தடைசெய்யப்பட்ட ஊக்கு மருந்தை பயன்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமைய குசல் ஜனித் பெரேராவிற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டி தடையை கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கட் சபை விலக்கியது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீடு உட்பட சட்ட நடவடிக்கைகளுக்காக குசல் ஜனித் பேரோராவிற்கு 5 லட்சம் பவுண்டுக்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டை வழங்க சர்வதேச கிரிக்கட் சபை இணங்கியுள்ளதால் செலவழிந்த தொகை ஈடு செய்ய நிதி கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|