கீரிமலை வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – கீரிமலையில் காணி இல்லாதவர்களுக்கு காணியுடன் கூடிய வீடமைக்கும் பணி இராண்டாம் கட்டமாக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெல்லிப்பழை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை அண்டிய அரச காணியில் ஏற்கெனவே 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு அவ் வீட்டுத்திட்டத்துக்கு “நல்லிணக்கபுரம்” என பெயரும் சூட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து முகாம்களில் வாழும் மேலும் 31 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் குறித்த வீடமைக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் இடம்பெயர்ந்த மக்களுக்கும் காணி அற்றவர்களுக்கு காணியும் வழங்கப்பட்டு வந்ததுடன் மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|