கிளிநொச்சி வீதி விபத்தில் ஒருவர் பலி!

கிளிநொச்சி ஏ-9 வீதி முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏ-09 வீதியின் திருமுறிகண்டி பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கிளிநொச்சி இரணைமடுவைச் சேர்ந்த வேலாயுதம் சதீகரன் (39) என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.இவரது சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தேருநர் இடாப்புக்களின் 2ஆவது வரைவு ஞாயிறுவரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் !
பெறுமதியான பணத்தாள்களை துபாய்க்கு கடத்தும் முயற்சி தடுப்பு!
கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை - அரச மருந்தாக்கல் கூட்டுத...
|
|