கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் இதுவரை சமூக தொற்றாக மாறவில்லை – மாவட்ட சுகாதார வைத்திய பணிப்பாளர்!

Friday, May 7th, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் இதுவரை சமூக தொற்றாக மாற்றமடையவில்லை என்று தெரிவித்துள்ள  மாவட்ட சுகாதார வைத்திய பணிபபாளர் வைத்திய கலாநிதி சரவணபவன், சுமார் ஆயிரம் கொறோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (07.05.2021) இடம்பெற்ற கொறோனா தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts: