கிளிநொச்சியில் வெடிபொருள் மீட்பு!

Friday, April 29th, 2016

கிளிநொச்சி பரந்தம் பகுதியிலுள்ள மலசலக்கூட கிடங்குகளிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (29) ஒரு  தொகுதி வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டள்ளன.

பரந்தன் பகுதியில் உள்ள வீடொன்றின் சுத்திகரிப்பு வேலைகள் நடைபெற்று  கொண்டிருக்கும் போது, அவர்களது மலசலக் கூடத்தை சுத்திகரிக்கையில் மலசலகூட கிடங்கில் இந்த வெடிபொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த இடத்துக்கு வந்த இராணுவ வெடிபொருட்கள் செயலிழக்கும் பிரிவினர், மலசலகூட கிடங்கில் பாவனைக்கு உதவாத நிலையில் இருந்த மிதிவெடிகள், எல்எம்ஜி துப்பாக்கி ரவைகள், எல்எம்ஜி மகசீன்கள், எல்எம்ஜி துப்பாக்கி பாகங்கள் மற்றும் பிகே பாகங்கள், மோட்டார் செல்கள் பற்றிகள், ஏகே மகசீன்கள், ஆர்விஜி செல் பாகங்கள் போன்றவற்றை மீட்டுள்ளனர்.

Related posts: