கிளிநொச்சியில் சிறுபோக செய்கை ஆரம்பம் !

Saturday, May 11th, 2019

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கால்நடைகளால் பெரும் சவால்கள் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இரணைமடு குளத்தினை நம்பி இவ்வருடம் 16 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையும், 800 ஏக்கர் சிறுதானிய செய்கையும், 600 ஏக்கர் அளவில் ஏற்று நீர்பாசன திட்டத்தின் கீழ் உப உணவு பயிர் செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிறுபோக செய்கைக்காக நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில் கால்நடைகள் பெரும் சவால்களை ஏற்படுத்துவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கால்நடைகள் கட்டாக்காலிகளாக திரிவதனால் பயிர் நிலங்கள் சேதமாக்கப்படுவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கால்நடை வளர்ப்போரும் இவ்விடயம் குறித்து உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts: