கிரிக்கெட் சபையின் புதிய பிரதம செயற்பாட்டு அதிகாரி தெரிவு!

Monday, June 13th, 2016

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் அதிகார பூர்வ இணையத்தளம், தனது பதவியை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் உடனடியாக ஏற்குமாறு ஜயரத்னவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நிர்வாகம் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல் பகுதிகளில் மேற்பார்வையிடுவதற்காக பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லே டி சில்வா உடன் இணைந்து பணியாற்றுமாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 2015ஆம் ஆண்டு மாவன் அத்தப்பத்துவின் பதவி விலகலை அடுத்து இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஜயரத்ன நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் உயர் செயற்திறன் மேலாளராக சைமன் வில்லிஸ் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: