கிரவல்மண் குவிப்பு: பயணிக்க முடியாதவாறு இடையூறு செப்பனிட்டுத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!
Friday, November 11th, 2016
நெடுங்கேணி மறாலிப்பை பருசங்குளம் வீதியில் மக்கள் போக்குவரத்து செய்ய முடியாதவாறு கிரவல்மண் கும்பிகள் ஆங்காங்கே குவிக்கப்பட்டு இருப்பதால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக பல தரப்பினரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மாறாலிப்பையிலிருந்து பருசங்குளம் செல்லும் பிரதான 2 கிலோ மீற்றர் வீதியானது குன்றும் குழியுமாக காணப்பட்ட போதிலும் இது தொடர்பாக பிரதேச மக்கள் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு முறையிட்ட வேளையில் இது தொடர்பான அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலமாகியும் இதற்கான வேலைகள் முடிவுறுத்தப்படாத நிலையில் பிரதேச சபையினால் வீதிக்கு குறுக்காக கிரவல்கள் பறிக்கப்பட்ட நிலையில் மக்கள் போக்குவரத்துகள் செய்ய முடியாத நிலைக்கு காணப்படுகின்றது. இக் கிராமத்திலிருந்து கர்பிணித் தாய்மார்கள், முதியோர்கள், அவசர நோயாளர்கள் கூட வீதியூடாக துவிச்சக்கரவண்டியில் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. இந்த செயல்களை அரசாங்க அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இது போன்ற தவறுகளை விடுவதனால் வவுனியா வடக்கு பிரதேச சபை இதனைக் கருத்தில் கொண்டு இவ்வீதியை இடையூகளின்றி விரைவாக செப்பனிட்டு தரும்படி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Related posts:
|
|