கின்னஸ் சாதனை படைக்கவுள்ள மரதன் ஓட்டத்தின் இலங்கைக்கான ஓட்டம் யாழ்ப்பாணத்தில்!

கின்னஸ் சாதனை படைப்பதை இலக்காகக்கொண்டு கனடாவைச்சேர்ந்த இலங்கை தமிழரான சுரேஷ் ஜோகிங்கினால் ஆரம்பிக்கப்பட்ட மரதன் ஓட்டத்தின் இலங்கைக்கான ஓட்டம் யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்துள்ளது
உலக அமைதிக்கான ஓட்டம் எனும் தொனிப்பொருளின் கீழ் 72 நாடுகளில் 4000 கிலோ மீற்றர் தூரம் ஓடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் வவுனியா மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட கனேடியப் பிரஜாவுரிமை பெற்றவரான சுரேஷ் ஜோகிங் இலங்கைக்கான இறுதி நாள் ஒட்டத்தினை நிறைவுசெய்துள்ளார்
நேற்று மாலை சாவகச்சேரி பேருந்து நிலையத்திலிருந் தனது இலங்கைக்கான இறுதிநாள் ஓட்டத்தினை ஆரம்பித்த ஜோகிங் மாலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார்
யாழ் நகரின் பிரதான வீதிவளியாக யாழ் மறைமாவட்ட ஆயர் இல்ல்திற்கு வருகைதந்த இவருக்கு ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் வரவேற்பளித்து இவரது இலக்கு நிறைவேற வாழ்த்தினார்
123 நாட்களில் 72 நாடுகளில் 4000 கிலோ மீற்றர் தூரம் ஓடி கின்னஸ் சாதனை படைப்பதே இவரது இலக்காகும்.
கடந்த நத்தார் பண்டிகையன்று பலஸ்தீனத்தில் பயணத்தை ஆரம்பித்த இவர் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட 24 நாடுகளில் இதுவரை ஓடியுள்ளார்.
கடந்தவாரம் கொழும்பு காலி முகத்திடலில் மாலை 4 மணிக்கு ஓட்டப் பயணத்தை ஆரம்பித்த அவர் 21.1 கிலோ மீற்றர் தூரம் ஓடினார். அதையடுத்து இவர் பிறந்த இடமான வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தில் ஓட்டப் பயணத்தை ஆரம்பித்த சுரேஸ் ஜோகிங், கிளிநொச்சியூடாக யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
இப்பயணத்தில் இவர் சேகரிக்கும் நிதியினை உலக தொண்டு நிறுவனங்களுக்கு கையளித்து அதன்மூலம் சர்வேதேசத்தில் வறுமையினை இல்லாதொளிக்க உதவுவது இவரது எண்ணமாகும்
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தினை வந்தடைந்ததுடன் தமது இலங்கைக்கான ஓட்டப்பணயத்தினை இவர் நிறைவுசெய்து அடுத்தநாடாக இந்தியாவிற்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|