காஸ் விநியோக தகவல்களை விரைவில் பெற்றுக் கொள்வதற்கு விசேட செயலி அறிமுகம்!

Sunday, May 22nd, 2022

காஸ் விநியோகம் மற்றும் காஸ் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை பற்றி நுகர்வோரையும் விற்பனை முகவர்களையும் தெளிவூட்டுவதற்கான தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த லிற்றோ காஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த செயலி எதிர்வரும் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்படுமென்று லிற்றோ காஸ் நிறுவனத்தலைவர் விஜித ஹேரத் கூறினார்.

இதன் மூலம் நுகர்வோரும் விற்பனை முகவர்களும் குறித்த பிரதேசத்தில் பகிர்ந்தளிக்கப்படும் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: