கால்நடை வளர்ப்பை மேம்படுத்துவதற்கு ரூபா 20 மில்லியன் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள உதவிப் பணிப்பாளார் !

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1) Friday, April 21st, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த வருடம் 20.98 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டக் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் வக்சலா அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆடு, மாடு, வழங்கல் கால்நடைகளுக்கான கொட்டில்களை அமைத்துக் கொடுத்தல், மாட்டுக்கான புல் வளர்ப்பு ஆகியவற்றுக்கான உதவிகளை வழங்கவுள்ளோம். தலா 40 கோழிக் குஞ்சுகள் 31 பேருக்கும், தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியாக ஆடுகள் 20 பேருக்கும் வழங்கப்படவுள்ளன. 25 பேருக்கு ஆட்டுக் கொட்டில்கள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

150 பேருக்கு மாட்டுக்கொட்டில்கள் அமைக்க உதவி வழங்கப்படும். இந்திட்டங்களை அடுத்த மாதம் முதல் செயற்படுத்தவுள்ளோம். இவ்வாறான உதவிகள் மக்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் மக்களின் அதிக பங்களிப்பையும் ஆர்வத்தையும் எதிர்பார்க்கின்றோம் என்றார்.


அமெரிக்காவுக்கான இலங்கை தூதரக கட்டிடம் வாடகைக்கு விடப்படவுள்ளது!
10ஆது நாளாக இன்றும் அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு!
பீட்டா அமைப்பால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த தமிழகம் முழுவதும் மாணவர்களின் எழுச்சி...
நிலக்கரி கொள்வனவில் மோசடிகளை தடுக்குமாறு கோரிக்கை!
மீனவர்கள் அத்துமீறும் போது, அவர்களை கடற்படையினர் கைது செய்வார்களே தவிர, துப்பாக்கிச் சூடு நடத்தமாட்ட...