கால்நடை ஆராய்ச்சி பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

Friday, November 4th, 2016

கால்நடை ஆராய்ச்சி உத்தியோகத்தர் மற்றும் ஆராய்ச்சி உத்தியோகத்தர் பதவிகளுக்கு போட்டிப்பரீட்சை மூலம் சேர்த்துக் கொள்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார சேவையில் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கையின் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார சேவையில் கால்நடை வைத்தியராக ஆகக்குறைந்த ஒரு வருடம் பூர்த்தி அத்துடன் ஆகக்கூடியது 3 வருடம் நிரந்தர சேவைக் காலத்தைக் கொண்டிருப்பவர்கள் கால்நடை ஆராய்ச்சி உத்தியோகத்தர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்படி சேவைக்காலத்துடன் மிருக வைத்திய விஞ்ஞானம் ஃ கால்நடை வளர்ப்பு விஞ்ஞானம் ஃ விவசாய விஞ்ஞானம் தொடர்பில் 4 வருட பட்டப்படிப்பினை 1ஆம் வகுப்பில் அல்லது 2அம் வகுப்பு பட்டத்தில் சித்தியடைந்தவர்கள் ஆராய்ச்சி உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை 18.11.2016 திகதிக்க முன்னராக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள் கிளை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், த.பெ.இல 1503 கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்புதல் வேண்டும். மேலதிக தகவல்களுக்கு 21.10.2016 திகதி வெளியான அரச வர்த்த மானியைப் பார்வையிடவும்.

images

Related posts: