கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Tuesday, January 17th, 2017

வடக்கு மாகாணப் பொதுச்சேவையில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் தரம் 3 மற்றும் பயிற்சித் தரம் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கன திறந்த போட்டிப் பரீட்சை – 2017 வடக்கு மாகாணப் பொதுச்சேவையின் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் தரம் 3 மற்றும் பயிற்சித் தரம் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2017 இற்கான விண்ணப்பங்கள் வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளன என வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் டாக்டர். எஸ் வசிகரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இப் பதவி நிரந்தரமுடையதும் ஓய்வூதிய உரித்துடையதும் என்பதுடன் க.பொ.த (உ.த) பர்Pட்சையில் விஞ்ஞான பிரிவில் உயிரியல், இரசாயனவியல், விவசாயம், பௌதீகவியல், உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்திற்கான தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் ஏதாவது 2 பாடங்கள் உட்பட 3 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருப்பதுடன் விலங்கு பரிபாலனம் தொடர்பான பாடநெறியில் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளோமா சான்றிதழ்கள் பெற்றவர்கள் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் தரம்3 இற்கு உள்வாங்கப்படுவார்கள்.

மேலும் க.பொ.த (உ.த) பர்Pட்சையில் விஞ்ஞான பிரிவில் உயிரியல், இரசாயனவியல், விவசாயம், பௌதீகவியல், உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்திற்கான தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் ஏதாவது 2 பாடங்கள் உட்பட 3 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றவர்கள் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் பயிற்சித் தரத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள் என்பதுடன் அவர்கள் 2 வருட விலங்கு பரிபாலனம் தொடர்பான பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவுடன் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் தரம் 3 இற்குள் உள்வாங்கப்படுவார்கள். மேலும் தற்போது உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் அனுமதி பெற தவறியவர்கள் விஞ்ஞான பிரிவில் 3 பாடங்களில் சித்தியடைந்துள்ளோர் இச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் ஓய்வூதிய உரித்துடைய அரச சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் 94 வெற்றிடங்கள் காணப்படுவதனால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளவர்கள் இவர் அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கௌ;ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை வடக்கு மாகாண சபையின் WWW.NP.GOV.LK என்ற இணைதளத்தில் பார்வையிட முடியும்.

K1024_cow

Related posts: