கால்நடைகளுக்கான உணவுப்பொதி கொள்வனவின்போது கவனம் தேவை – பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை வலியுறுத்து

Thursday, October 6th, 2016

கால்நடைகளுக்கான உணவுப்பொதிகளில் நிறை பொதிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், நுகர்வோர் கால்நடைகளுக்கான உணவுப்பொதிகளை கொள்வனவு செய்யும்போது நிறையில் கவனம் செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்.மாவட்ட அதிகாரி தகசேகரம் வசந்த சேகரன் அறிவுறுத்தியுள்ளார்.

தென்பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யும் கால்நடைகளுக்கான “கோதுமைத் தவிடு” 40 கிலோ கிராம் பொதி செய்யப்பட்ட பொதிகளில் 2கிலோ கிராம் சிறை குறைவடைந்து விற்பனை செய்யப்படுகின்றது. குறித்த கால்நடைகளுக்கான உணவு “கோதுமைத் தவிடு” கொள்வனவு செய்த நுகர்வோர் ஒருவர் யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம், தென் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் முகவர்களிடம் இருப்பில் உள்ள பொதிகளின் எடையினை பரிசீலனை செய்து பார்த்தபோது சுமார் 2கிலோ நிறை குறைவடைந்து காணப்படுகின்றன. நிறை குறைந்த பொதிகள் குறித்து தென்னிலங்கையில் உள்ள நிறுவனத்திடம் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர்.

அக் கலந்துரையாடலின் போது, குறித்த கால்நடைக்கான உணவுப்பொதிகளில் நிறை குறைவடைந்துள்ளதை ஏற்று அப் பொதிகளை சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்வதாக அந்த நிறுவனம் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு உறுதியளித்துள்ளனர். அந்த வகையில், கால்நடைகளுக்கான உணவுப்பொதிகளை (கோதுமைத் தவிடு) கொள்வனவு செய்யும் நுகர்வோர்கள் நிறையினை கவனம் செலுத்திப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளதுடன் சந்தையில் விற்பனை செய்யும் பொருட்களின் நிறை குறைவாக காணப்படுமாயின் உடனடியாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அலுவலகத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும், அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் அறிவித்துள்ளார்.

cowfood

Related posts: