காலை வேளையிலும் பேருந்து சேவை வேண்டும் – பொது அமைப்புகள் கோரிக்கை!

Thursday, February 8th, 2018

கிளிநொச்சி – அக்கராயனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான பேருந்து சேவையை காலை வேளையில் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முட்கொம்பன் வழியாக யாழ்ப்பாணத்திற்கான பேருந்து சேவைகள் நடைபெற்றன. ஸ்கந்தபுரத்திற்கும் முட்கொம்பனுக்கும் இடையிலான வீதி புனரமைக்கப்படாததன் காரணமாக தனியார் பேருந்து சேவைகள் இடை நிறுத்தப்பட்டன. இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் ஒரேயொரு பேருந்து மட்டும் பிற்பகலில் யாழ்ப்பாணம் சென்று காலை வேளையில் அக்கராயன் வழியாக கிளிநொச்சிக்கான சேவையில் ஈடுபடுகின்றது.

இந்நிலையில் குறித்த வீதி தற்போது தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் காலை வேளையிலும் யாழ்ப்பாணத்திற்கான பேருந்து சேவையை நடத்துமாறு இப்பகுதி பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Related posts: