காலநிலை மாற்றத்தின் எதிரொளி : துருவத்தில் அதிக வெப்ப நிலை பதிவு!

Sunday, December 25th, 2016

வட துருவத்தில் உள்ள வெப்ப நிலையானது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் சராசரி வெப்ப நிலையை விட ஐந்து டிகிரி அதிகமாக பதிவாகி கடந்தகால உச்சங்களை முறியடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற வெப்பநிலை, காலநிலை மாற்றத்தின் காரணமாக அதிகரித்துக் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வட அட்லாண்டிக் பகுதியிலிருந்து வரும் வெப்பக் காற்று மற்றும் குறைந்து வரும் ஆர்டிக் கடல் பனி ஆகிய காரணங்கள் இந்த நிகழ்விற்கு பங்காற்றியுள்ளது.

தொழில்மயமாக்கலுக்கு முன், இதுபோன்ற ஆர்டிக் நிகழ்வை ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி கண்டிருக்கலாம். ஆனால், தற்போதைய மாதிரிகள் அடிப்படையில் ஒவ்வொரு 50 ஆண்டுகளுக்கும் இந்நிகழ்வு நடைபெறுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

_93118519_gettyimages-51098846

Related posts: