காலநிலை சார்ந்த சவால்களை வெற்றி கொள்ளத்திட்டம்!

Saturday, January 7th, 2017
காலநிலை சார்ந்த சவால்களை வெற்றி கொள்ளக்கூடிய பல்வேறு வேலைத்திட்டங்கள் இவ்வாண்டில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஈரவலயத்தில் தரிசு நிலங்களாக காணப்படும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வயல் காணியில் பயிர் செய்கையை மேற்கொள்ளவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக  விவசாய அமைச்சின் செயலாளர் பி.விஜரட்ன தகவல்தருகையில் இதற்கான வேலைத் திட்டம் இம்மாதம் 15ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இதற்கமைய ஈரவலயத்தில் உள்ள காணிகளில் கூடுதலாக பயிர்ச்செய்கை மேற்கொள்வது பற்றி கவனம் செலுத்தப்படும்.

இதே வேளை வறட்சியான காலநிலையினால் கடந்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட அறுவடையை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்த செயலாளர் எதிர்பார்க்கப்பட்ட அறுவடைiயில் 60 சதவீதம் மாத்திரமே கிடைத்ததாக  கூறினார்.

eb83b4ff1417b11aa7f4fbe1d7424bcd_XL

Related posts: