காற்று மாசடைவதால் வருடாந்தம் சுமார் 70 லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம்!
Friday, May 13th, 2016காற்றில் மாசுக்கள் அதிகரித்து வருவதால் வருடாந்தம் சுமார் 70 லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள நகரங்களில் காற்றில் மாசுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் போக்குவரத்துக் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் எடுத்துள்ளன.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, காற்று மாசு அதிகரிப்பு காரணமாக ஆண்டிற்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளது.
மேலும், இந்தியாவில் குவாலியர், அலகாபாத், பாட்னா மற்றும் ராய்பூர் நகரங்களில் காற்று மாசு கடுமையாக உள்ளதாகவும், உலக காற்று மாசு நகரங்களின் பட்டியலில் டெல்லி 9வது இடத்தில் உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related posts:
பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டம்!
வெளிநாட்டவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை - பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு!
|
|