காற்றின் வேகம் அதிகரிப்பு – காலநிலை அவதான நிலையம்!

Wednesday, January 10th, 2018

நாட்டின் வடக்கு திசையில் அமைந்த கடற்பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையால் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமீட்டருக்கு இடையே அதிகரித்து வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையிலிருந்து. காங்கேசன் துறை ஊடாக மன்னார் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் இவ்வாறு காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடற் தொழிலாளர்களும் கடற்படையும் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் வானிலை அவதான நிலையம் வலியுறுத்தியுள்ளது.

Related posts: