காரைக்கால் சென்றது நாடா புயல்!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த கொண்டிருந்த நாடா புயல் காரைக்கால் அருகே கரையை கடந்துவருகிறது. மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம் என மீனவர்களுக்கு சென்னை வானிலைநிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக இருந்த நாடா புயல் நள்ளிரவில் வலு இழந்து தாழ்வு மண்டலமாக மாறியது. கரைக்காலுக்கு தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்து கொண்டிருந்த நாடா புயல் கரை கடக்கிறது. நடா புயல் வலு இழந்து கரையைக் கடப்பதால் பாதிப்பு இருக்காது என சென்னை வானிலை நிலைய தகவல் தெரிவித்துள்ளது.
நடா புயல் கரையை கடப்பதால் காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனையடுத்து பேரிடர் மீட்பு படையினர், வருவாய் துறையினர், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. கடலூர் மற்றும் நாகை உள்ளிட்ட பகுதிகளிலும், கடற்கரை பகுதிகளிலும் பலத்த காற்று வீசி வருகிறது. இன்னும் ஓரிரு மணி நேரங்களில் நடா முற்றிலும் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன
Related posts:
|
|