காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Thursday, April 13th, 2017

காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த யாழ். அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 58 வயது குடும்பஸ்தரொருவர் சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த-05 ஆம் திகதி காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த குறித்த குடும்பஸ்தர் மாத்திரை பாவித்த போதும் காய்ச்சலின் வீரியம் குறையவில்லை. இதனையடுத்து மேற்படி குடும்பஸ்தர் மறுநாள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். குறித்த குடும்பஸ்தரைப் பரிசோதித்த வைத்தியர்கள் காய்ச்சலுக்கு மருந்து கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார். எனினும், குறித்த மருந்திற்கும் காய்ச்சல் குறையவில்லை. இதன் பின்னர் கடந்த 08 ஆம் திகதி குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றுக் காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

யாழ். அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை தேவராசா(வயது-58) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

Related posts: