காதி நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்பில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Monday, January 25th, 2021

காதி நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்பில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் காதி நீதிமன்றங்களின் வெற்றிடங்களுக்கு காதி நீதிபதிகளை நியமிக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஆனாலும் இது தொடர்பில் பல்வேறுதரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெபிலியான சுனேத்ரா தேவி விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மேலும் கூறுகையில் –

காதி நீதிமன்றங்கள் தொடர்பாக மீண்டும் பேசப்படுகிறது. ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அரசின் கொள்கைக்கு அமைய தனித்தனி நீதி மன்றங்கள் இருக்க முடியாது. காதி நீதிமன்றங்கள் குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: