காணாமல் போயிருந்த வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
Saturday, December 10th, 2016கடந்த மூன்று நாட்களாக காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை சேர்ந்த 80 வயதான மூத்தார் இராசரத்தினம், கனகாம்பிகைக்குளம் பாடசாலைக்கு முன்பக்கமாக இருக்கும் வீட்டின் பாழடைந்த கிணற்றில் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
தனியாக வசித்து வந்த இவரை காணவில்லை என கிராம வாசிகளால் தேடப்பட்டு வந்த நிலையில், குறித்த பாழடைந்த கிணற்றில் சடலமாக மிதப்பதனை அவதானித்த கிராம மக்கள் கிளிநொச்சிப் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சிப் பொலிசார், கிளிநொச்சி குற்றத்தடகவியல் பொலிசார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் குறித்த சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த வயோதிபரின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இறந்த வயோதிபர் அவரது கையில் டோச் லைட்டை இறுக்கப் பிடித்தவாறு இறந்துள்ளார்.
கிணற்றில் விழுந்து இறந்த ஒருவர் எவ்வாறு குறித்த டோச் லைட்டை கைவிடாமல் இறக்க முடியும் எனக் கேள்ளவி எழுப்பி உள்ளனர். மேலும் அவர் காணாமல் போய் மூன்று நாட்களான நிலையில் அவரது சடலத்தினைப் பார்க்கும் போது இறந்து ஒரு நாட்களே ஆன சடலம் போன்று உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அவர் காணாமல் போன செய்தி குடும்பத்தாருக்கு கிராம மக்களால் வழங்கப்பட்டும், இதுவரை குடும்ப உறவுகள் யாரும் வரவில்லை என்று கிராமமக்கள் தெரிவிக்கின்றனர் குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
|
|