காணாமல் போனோரது உறவினர்களுக்கு நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – சர்வதேச மன்னிப்பு சபை !

Saturday, November 28th, 2020

இலங்கை அரச அதிகாரிகள், காணாமல் போனோரது உறவினர்களுக்கு நீதி, உண்மை மற்றும் நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுசெயலாளரது அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் க்ரிஃப்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் அல்லது அரசியல் நெருக்கடிகளால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வெளியிட்டிருக்கிறது.

இது ஒரு முக்கியமான நகர்வாகும்.

இந்தநிலையில் நீண்டகாலமாக தங்களது உறவுகளைத் தேடி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

இதற்கான நடவடிகைகளை அரசாங்கம் தாமதிக்காது மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தமது அறிக்கையில் வலியுறுத்தி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: