காணாமல்போன வர்த்தகர் யாழில் கைது!
Wednesday, September 7th, 2016திருகோணமலை பகுதி வங்கி ஒன்றுக்கு சென்றிருந்த வேளையில் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட வர்த்தகர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரகம, அடுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரே நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து மறைந்திருந்த போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த வர்த்தகர் நண்பர் ஒருவருக்கு எடுத்த தொலைபேசி அழைப்பினை பரிசீலித்தே குறித்த வர்த்தகரை கைது செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.பண்டாரகம, அடுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மொஹமட் நஸ்ரின் என்னும் வர்த்தகர் காணாமல்போனதாக வர்த்தகரின் தந்தை பண்டாரகம பொலிஸில் கடந்த திங்கட்கிழமை முறைப்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து குறித்த வர்த்தகர் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் 23 பேரிடம் வாக்குமூலம் பெற்று விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் காணப்படும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று ஆரம்பமானது கல்வி பொதுத் தராதர சாதாரண தர...
ஜப்பானிய பிரதமருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு - சிறந்த தொழில் தகைமைகளை கொண்ட இலங்கையர்களுக்கு ஜப்பானி...
அதிக வெப்பம் - சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம் - தோல் நோய் வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்து!
|
|