காணமால் போனவர் சடலமாக மீட்பு!

காணாமல் போயிருந்த முதியவர் ஒருவர் நேற்றையதினம் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்.காரைநகரைச் சேர்ந்த சின்னப்பு (வயது-65) என்ற முதியவரே காரைநகரில் உள்ள குளமொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கடந்த 4 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையிலேயே நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
சாரதிகளை உள்ளீர்க்க அமைச்சர் இணக்கம்!
விசர் நாய்க்கடி மருந்துகள் போதியளவு கையிருப்பில் - கிளி.சுகாதாரப் பணிப்பாளர்!
இலங்கை - இந்திய இராணுவத் தளபதிகள் சந்திப்பு !
|
|