காசநோயை அறிந்துகொள்ளும் புதிய பரிசோதனை முறை!
Thursday, March 30th, 2017
புதிய பரிசோதனை மூலம் காசநோயை 1 மணித்தியாலத்தில் கண்டுபிடிக்கலாம் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உயிர் கொல்லி நோய்களில் காச நோயும் ஒன்று, இது உலகளவில் மிக முக்கியமான நோய் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் ஆண்டுதோறும் இந்த நோயினால் 100,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். 20 இலட்சம் பேர் மரணம் அடைகின்றனர், காச நோயை உருவாக்கும் பக்டீரியாக்கள் பல ஆண்டுகளாக நோயாளியின் நுரையீரல் திசுக்களில் தங்கி உயிர் வாழ்கிறது. பின்னர் உடலில் பல உறுப்புகளில் பரவி காச நோயை உருவாக்குகிறது, இது போன்ற காசநோயினால் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு மடங்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இத்தகைய கொடிய காச நோய் இருமலின் போது ஏற்படும் சளி, மற்றும் இரத்த மாதிரி, போன்றவற்றின் பரிசோதனை மூலம் கண்டு பிடிக்கப்படுகிறது. அதுவும் மாதிரிகள் வழங்கப்பட்டு 3 நாட்கள் அல்லது ஒரு வாரம் கழித்து தான் அறிய முடிகிறது, அப்படி இருந்தும் அவற்றை துல்லியமாக அறிய முடிவதில்லை. சில நேரங்களில் தவறுகள் நிகழ்கின்றன. ஆனால் புதிய முறையில் இரத்த பரிசோதனை மூலம் ஒரு மணி நேரத்தில் காச நோயை கண்டுபிடிக்க முடியும் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை ‘நானோ டிஸ்க்‘ முறை என குறிப்பிடப்படுகின்றது, இதன் மூலம் நோயாளிக்கு விரைவாக சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
|
|